அருண்விஜய்யின் சினம் படம்…புதிய அப்டேட் !

Sinoj| Last Modified திங்கள், 28 ஜூன் 2021 (16:15 IST)

அருண்விஜய் நடித்த ‘சினம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் இப்படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதற்குப் பதில் அளித்துள்ளார் நடிகர் அருண் விஜய்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் சினம். இப்படத்தை ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்று விட்ட நிலையில் ஓடிடியில் ரிலீசாகும் என்று ஒரு சிலர் கூறி வந்தபோதிலும் இந்த படம் திரையரங்குகளில் தான் உருவாகும் என இயக்குனர் ஜிஎனார் குமரவேலன் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளார். தற்போது திரையரங்குகள் திறக்கும் சூழ்நிலை இருப்பதால் விரைவில் திரையரங்குகளில் பிரமாண்டமாக ‘சினம்’ ரிலீஸாகும் என்றும் இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ரசிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே போல் இப்படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் அருண் விஜய் கூறியுள்ளதாவது: சினம் திரைப்படம் கொரோனா தொற்றுக் குறைந்ததும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும்…

இனிமேல் பாதுகாப்பான சுழல் நிழவும் என நம்பிக்கை கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :