1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 29 ஜனவரி 2020 (12:58 IST)

நாம் தமிழர் எனும் தீவிரவாதிகள் நாங்கள்... முழங்கிய சீமான்!

கட்சி பொதுக்கூட்டத்தில் நாங்கள் தீவிரவாதிகள் என்று கையை உயர்த்தி பகிரங்கமாக அறிவித்துள்ளார் சீமான். 
 
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் ரஜினியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். 
 
அதோடு, பழனிபாபா பற்றியும் சீமான் பேசினார். பழனிபாபாவை தீவிரவாதியாக ஏற்கக் கூடாது என்று முதலில் முழங்கிவிட்டு, அடுத்த சில நொடிகளிலேயே பழனிபாபாவை போல தானும் ஒரு தீவிரவாதிதான் என்றும் கூறினார்.
 
அதோடு, நாங்கள் தீவிரவாதிகள் என்றும் கையை உயர்த்தி பகிரங்கமாக அறிவித்தார். இறுதியில் பழனிபாபாவை கருத்தால் வீழ்த்தியிருந்தால் அவன் தீவிரவாதி, ஆனால் அவரை வெட்டி வீழ்த்திய செயல்தான் தீவிரவாதம் பயங்கரவாதம் என்று ஒருவழியாக ஏதோ பேச வந்த எதையோ பேசி முடித்தார்.