சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (12:25 IST)

வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்- படம் வேற லெவல் தான்!

அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். இவர் தற்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறாராம். 
 
இப்படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயின்க நடிக்கிறார். விருமன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் இப்படத்தின் வேலைகள் துவங்கும். 
 
இப்படத்தை ஆகாஷின் மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறாராம். சேவியர் பிரிட்டோ விஜய்யின் நெருங்கி உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்கம், தயாரிப்பு என இது பெரிய டீம் என்பதால் நிச்சயம் படம் வேற லெவல் ஹிட் அடிக்கும் என்கிறது கோலிவுட்.