இந்த காலத்துல இப்படியும் ஒரு நல்ல புருசனா நம்மவே முடியல - மகாலக்ஷ்மியின் கணவர் பேட்டி!
தேவதையை கண்டேன் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி அதே சீரியலின் ஹீரோவான ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருப்பதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஈஸ்வர், எனக்கு மஹாலக்ஷ்மியுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனவும் மஹாலக்ஷ்மியின் கணவருக்கும் எனது மனைக்கு தான் தொடர்பு இருக்கிறது என குண்டு தூக்கிப்போட்டார்.
இதை அடுத்து சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி என்மீது போடும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் பிரச்சனையில் உள்ளேன், அது எனது சொந்த பிரச்சனை. ஆனால் ஈஸ்வருடன் என்னை தொடர்பு படுத்தி பேசும் ஜெயஸ்ரீ, எனது கணவருடன் நீண்ட நாட்களாக பழகி வருகிறார் என கூறி பிளேட்டை திருப்பிப்போட்டார்.
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து மகாலஷ்மியின் கணவர் அணில் குமார் முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த சில நாட்களாக நிறைய பிரச்சனை ஓடிட்டு இருக்கு. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நாங்கள் இருவரும் சேர்ந்து இல்லை. நான் பணம் பணம் என அலைபவன் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த விஷயத்தில் நான் அவளை குத்தம் சொல்லவில்லை. ஏனென்றால் அவளின் சூழ்நிலை அப்படி....எனக்கு இப்போவும் உன்னை பிடிக்கும் I still loving her. எனக்கு எதுக்காக விவாகரத்து கொடுத்தாங்கனு தெரியல... அவங்க இப்போ திரும்பி வந்தாலும் நான் முழு மனதோடு ஏற்றுக்கொள்வேன். மேலும் எனக்கும் ஜெயஸ்க்கும் தொடர்பு இருப்பதாக கூறி பேசுகிறார்கள். நிச்சயம் அப்படி இல்லை . நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே.. மஹாலக்ஷ்மி சொன்னதுபோல் அடிக்கடி சந்தித்து கொண்டதெல்லாம் கிடையாது. இரண்டு முறை சந்தித்துள்ளோம் அதுவும் 10 , 15 நண்பர்களுடன் சேர்ந்து தான் சந்தித்தோம் என அவர் கூறியுள்ளார்.