1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 27 செப்டம்பர் 2021 (20:10 IST)

நடிகை யாஷிகாவின் உடல்நிலை... நேரில் சந்தித்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு சந்தானம் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த்.  பின்னர் பிக்பாஸ் -2 ல் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலமானார்.

இதையடுத்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடமையைச் செய் என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட யாஷிகா இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

ஜூலை மாதம் யாஷிகா தனது நண்பர்களுடன் பயணித்துக்கொண்டிருந்தபோது , விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் இவரது தோழி சம்பவம் இடத்திலேயே பலியானார். இந்நிலையில் இன்று மருத்துவமனை சென்று யாஷிகாவை பார்த்த நடிகர் அசோக், அவருடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  யாஷிகா குணமடைய இன்னும் 5 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.