1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (11:41 IST)

சென்னையை சேர்ந்தவரை மணந்தார் நடிகை வித்யா உன்னி!

தமிழில் ஆண்டான் அடிமை, வேதம், பாளையத்து அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி.



இவரது  தங்கை வித்யா உன்னி  மலையாளத்தில் டாக்டர் லவ், 3 ஜி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.  வித்யா உன்னியும் சமீபத்தில் சினிமாவை விட்டு விலகினார். தற்போது ஹாங்காங்கில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
 
இந்நிலையில் வித்யா உன்னிக்கும், சென்னையை சேர்ந்த சஞ்சய் வெங்கடேஸ்வரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் கொச்சியில் நடந்தது. இதில் திவ்யா உன்னி கலந்துகொண்டார். நடிகர்-நடிகைகள் மற்றும் உறவினர்களும் பங்கேற்று வாழ்த்தினார்கள்.