திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (18:25 IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது தெரிந்ததே. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும், எம்எல்ஏக்கள், எம்பிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல அரசியல் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அவர்களில் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி காங்கிரஸ் மூத்த தலைவர் அகமத் பட்டேல் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகமது பட்டேல் விரைவில் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.