திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (15:21 IST)

ஆண் நடிகர்களுக்கு மட்டும் சிக்ஸ் பேக் வைப்பாங்களா?.. பட்டாசான போட்டோவை இறக்கிய டாப்ஸி

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

தற்போது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகும் டோபாரோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகிறது.

இப்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவர், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாறியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)