அங்காடி தெரு திரைப்பட புகழ் சிந்து காலாமானார்!
தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் சிந்து. குறிப்பாக அங்காடி தெரு படத்தின் மூலமாக அவர் பிரபலமானார். அதன் பின்னர் பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சையில் அவரின் இரண்டு மார்பகங்களும் நீக்கப்பட்ட நிலையில் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 12 மணியளவில் அவரது இல்லத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது உடல் இப்போது அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் விருகம்பாக்கம் மின் மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.