சனி, 23 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (08:57 IST)

சிரஞ்சீவிக்கு புற்றுநோய் என பரவிய தகவல்… அவரே அளித்த விளக்கம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, அரசியலுக்கு சென்று அங்கு சாதிக்க முடியாமல் மீண்டும் சினிமாவுக்கே திரும்பியுள்ளார். ஆனால் சினிமாவின் இரண்டாவது இன்னிங்ஸ் அவருக்கு முதல் இன்னிங்ஸ் போல வெற்றிகரமாக அமையவில்லை.

சிரஞ்சீவி தொடர்ந்து ப்ளாப் படங்களாக கொடுத்து வரும் நிலையில் இப்போது வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.  சமீபத்தில் சிரஞ்சீவி புற்றுநோய் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அதில் அவர் “தொடர் பரிசோதனைகள் மூலமாக புற்றுநோயைத் தடுக்க முடியும். நான் முன்னெச்சரிக்கையாக பெருங்குடல் சோதனையை மேற்கொண்டேன். அப்போது புற்றுநோய் பாதிப்பில்லாத பாலிப்கள் இருந்தது தெரிந்தது. அதன் பின்னர் அவை அகற்றப்பட்டன. ஒருவேளை நான் பரிசோதனை செய்யாமல் இருந்தால் எனக்கு அந்த பாலிப்கள் மூலம் புற்றுநோய் வந்திருக்கும்.” எனப் பேசினார்.

ஆனால் அவரின் இந்த பேச்சு மூலம் சிரஞ்சீவிக்கு புற்றுநோய் இருந்து சிகிச்சை மூலம் அது குணமானதாகவும் செய்திகள் பரவின. இதையடுத்து சிரஞ்சீவிக்கு தனக்கு புற்றுநோய் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.