''மகான்'' படத்தில் நடிகை சிம்ரன் கேரக்டர் அப்டேட்
விக்ரம் மற்றும் துருவ் நடித்துள்ள மகான் படத்தில் நடிகை சிம்ரன் கேரக்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் நடித்த மஹான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஓடிடியில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள எவன் டா எனக்கு கஸ்டடி என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு பாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், மகான் படத்தில் நடிக்கும் நடிகை சிம்ரனின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், நாச்சி என்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் சிம்ரனின் கதாப்பாத்திரம் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.