வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (20:45 IST)

நீங்க போடுற உள்ளாடை என்ன பிராண்டு..? வெளுத்து வாங்கிய நடிகை..!

நடிகைகள் ‘மீ டூ’வில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர் . சமீபத்தில் கன்னட நடிகை சங்கீதா பட் என்பவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை வெளியிட்டு இருந்தார். இவர் தமிழில் லொள்ளுசபா, ஜீவா நடித்த ஆரம்பமே அட்டகாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்து முகநூலில் அவர் கூறியதாவது, நான்  15 வயது இருக்கும்போதே இயக்குனர் ஒருவர், படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி அவரது காரில் அழைத்துச் சென்று சில்மிஷங்கள் செய்தார் அதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். 
 
 2016-ல் தமிழில் டி.வி நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக நடித்த படத்தில் நடித்தேன். அவரது பைக் பின்னால் நாம் அமர்ந்து செல்வதுபோன்ற காட்சியை எடுத்தனர். பைக்கை வேகமாக ஓட்டி சென்று திடீரென்று நிறுத்திய அவர்,  என்னிடம் நீங்க எந்த பிராண்டு உள்ளாடை அணிந்து இருக்கிறீர்கள் என்று கேட்டு ஆபாசமாக பேசினார். மேலும் சில இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்தனர் என்று சங்கீதா பட் கூறியிருந்தார். 
 
அவரின் இந்த பதிவிற்கு பல ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனம் வந்ததை அடுத்து அதை டெலிட் செய்துவிட்டு தற்போது மற்றொரு வீடியோவை பதிவேற்றியுள்ளார் சங்கீதா . அதாவது நான் சினிமாவில் இருந்து விலகி விட்டேன் இனி இப்படி சொல்லித்தான் எனக்கு பப்ளிசிட்டி கிடைக்க வேண்டுமென்ற அவசியமில்லை, நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை  அது எனக்கு அவசியமுமில்லை, இதுவரை இண்டஸ்ட்ரியில் எனக்கு மோசமான பெயர் ஏதுமில்லை. ஆனால் இந்த ஒரு பிரச்சனை எனக்கு மோசமான அனுபவத்தை கொடுத்தது.
 
இப்போது அமைதியான வாழக்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன், அதனால் தயவுசெய்து என் பெயரை தவறாக குறிப்பிடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் என சங்கீதா பட் தெரிவித்துள்ளார்.