ஓஹோன்னு ஓடிய "ஓ பேபி" - சம்பளத்தை கூட்டிய சம்மு! எத்தனை கோடி தெரியுமா!

Last Updated: வியாழன், 25 ஜூலை 2019 (12:14 IST)
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக பல படங்ககளில் நடித்து ஹிட் அடித்து வருகிறார். 


 
அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக பேசப்பட்டது மட்டுமல்லாமல் , விநியோகிஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்து ராசியான நடிகையாக வலம் வருகிறார். 
 
இந்த படத்தை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் வித்யாசமான கதைக்களத்தில் உருவாகிய ஓ பேபி திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் தெலுங்கு என  இரண்டு மொழிகளில் வெளியான இப்படம் மிஸ் கிராணி என்ற கொரியன் மொழி படத்தின் ரீமேக். 


 
கடந்த ஜூலை 5ம் தேதி வெளியான இப்படம் ஹிட் அடித்து  வசூலில் வேட்டையாடியது. அத்துமடடுமின்றி இப்படம் அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் வசூல் செய்துள்ளதாம். இதனால் சமந்தாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர, தற்போது  தனது சம்பளத்தை இரட்டிப்பாக்கி விட்டாராம் . இதற்கு முன்பு ஒரு படத்திற்கு 1.5 கோடி முதல் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த சமந்தா தற்போது 3 கோடியாக உயர்த்தியுள்ளாராம். 


இதில் மேலும் படிக்கவும் :