பறை வாசித்து அசத்திய நடிகை ரோஜா - வைரல் வீடியோ!
கடந்த 1992 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் உருவான செம்பருத்தி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ரோஜா. பின்னர் இவர்கள் இருவரும் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திராவின் நகரி தொகுதியிலிருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சார்பில் எம்.எல்.ஏ,வாக தேர்வு ஆனார். பின்னர் 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏஆக தேர்வு ஆனார். தற்போது ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பின் தலைவராக இருக்கும் அவர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனது தொகுதியில் உள்ள பறை இசை கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை ரோஜா அந்த கலைஞர்களின் இசை திறமையை ரசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் திடீரென எழுந்து பறை இசையை வாசித்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.