திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2017 (11:53 IST)

தனுஷ், சிம்பு பட நாயகியின் அதிரடி முடிவு: டிவிட்டரில் பரபரப்பு!!

நடிகை ரிச்சா இனி சினிமாவில் நடிக்க போவது இல்லை என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


 
 
நடிகர் தனுஷ் மற்றும் சிம்புவுடன் மயக்கம் என்ன மற்றும் ஒஸ்தி படங்களில் நடித்தவர் ரிச்சா. இவர் சில தெலுங்கு படங்களிளும் நடித்துள்ளார்.
 
இந்நிலையி இவர் இனி நான் சினிமாவில் நடிக்க போவது இல்லை எனது சினிமா பயணம் முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார். 
 
அதோடு, வயதானாலும் நடிகர்கள் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால், நடிகைகளுக்கு சில வருடங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் இனி எப்போதும் நடிக்கவே மாட்டேன் என கூறியுள்ளார். 
 
அமெரிக்காவில் எம்பிஎ படித்து வருகிறார் ரிச்சா. இவர் நடிப்பில் படங்கள் வெளியாகி கிட்டதட்ட ஐந்து வருடங்கள் ஆகப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.