வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (16:04 IST)

பயத்தின் விளிம்பில் ஜி.வி பிரகாஷ்! அலறவிடும் வாட்ச்மேன்!

வாட்ச்மேன் படத்தின் புரோமோ வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜி.வி பிரகாஷ், இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி கைநிறைய பல படங்களை வைத்துள்ளார்.
 
இந்த வருடத்தில் தன்னுடைய முதல் ரிலீசான சர்வம் தாள மயம் அவருக்கு நல்ல ஆரம்பத்தையும் அமோக வரவேற்பையும் பெற்று தந்தது. 
 
அதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் விஜய் இயக்கத்தில் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படதில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சேர்ந்து சாய்ஷா, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு , முனீஸ்காந்த், ராஜ் அருண், சுமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான முறையில் நாய் ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. சமீபத்தில் நரேந்திர மோடியை கலாய்க்கும் விதத்தில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 
 
இந்நிலையில் நாளை( ஏப்ரல் 12) வெளியாகவுள்ள இப்படத்தின் புரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.