கட்டுப்பாடில்லாமல் போன ராய் லட்சுமியின் கவர்ச்சி - மதிமயங்கி வர்ணிக்கும் ரசிகர்கள்!

Last Updated: புதன், 17 ஜூலை 2019 (18:06 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.  அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.


 
பிறகு அம்மணிக்கு  அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய  ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.  
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக  தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துவரும் இவர் தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகினி உடையணிந்து கண்ணை கவரும் கவர்ச்சியை வெளிப்படுத்தி  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இதனை கண்ட ரசிகர் வகை வகையாய் வர்ணித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :