1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (18:12 IST)

ஐ.ஏ.ஏஸ் ஆக வேண்டும் என்பது எனது கனவு: பிரபல நடிகை பேட்டி!

Raashi
ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது எனது கனவு என்றும் ஆனால் கடவுள் என்னை சினிமா நடிகையாகி விட்டார் என்றும் பிரபல நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார் 
 
நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ராஷிகண்ணா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ராஷிகண்ணா நான் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று நினைத்தேன் என்றும் கடவுள் எனது தலையெழுத்தை முடிவு செய்து சினிமாக்களில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் என்றும் தெரிவித்தார்
 
மேலும் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சினிமா துறைக்கு வந்து கதாநாயகியாக இவ்வளவு பேரும் புகழும் பெற்று இருப்பது கடவுளின் கருணையால் தான் என்றும் தெரிவித்துள்ளார்