இவங்க டிரைவரோ, கொத்தனாரோ இல்ல! காதல் தம்பதிகள்! – ட்ரெண்டாகும் Pre Wedding போட்டோஷூட்

Kerala
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:12 IST)
திருமணத்திற்கு முன்பான Pre Wedding போட்டோஷூட்டுகள் தற்போது பெரும் ட்ரெண்டாக மாறியுள்ள நிலையில் பாட்டாளி மக்களாக தம்பதியர் ஒப்பனை செய்து வெளியாகும் போட்டோஷூட்டுகள் வைரலாகி வருகின்றன.

திருமணம் என்றாலே பெரும் செலவு வைக்கும் விஷயம் என்றால், அதில் திருமண ஜோடிகளிடையே தற்போது திருமணத்தை விடவும் அதிகமாக முக்கியத்துவம் பெற்றுள்ளது திருமணத்திற்கு முன்னதாக நடத்தும் Pre Wedding போட்டோஷூட். ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்னதாக ஏதாவது ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று திருமண தம்பதிகளை பல்வேறு ஒப்பனைகளில் போட்டோ எடுத்து வந்தனர்.

பின்னர் இது படிப்படியாக ட்ரெண்டாகி வெறும் போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டு போஸ் கொடுப்பது முதல் உயிருக்கு ஆபத்தான சாகச போட்டோஷூட்டுகள் வரை வளர்ந்தது. தற்போது ஆட்டோ டிரைவர், கொத்தனார் போன்ற பாட்டாளி மக்களை போன்று ஒப்பனை செய்து வெளியாகும் போட்டோஷூட்டுகள் பரவலாக ட்ரெண்டாக தொடங்கியுள்ளன.

இந்த மாதிரியான எதார்த்தமான போட்டோஷூட்டுகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பலர் ஆபத்தான மற்றும் ஆபாசமான போட்டோஷூட்டுகளை விட அன்றாட வாழ்வில் சந்திக்கும் உழைக்கும் மக்களை அடையாளப்படுத்தும் போட்டோஷூட்டுகள் சிறந்தவை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :