1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (20:27 IST)

கல்யாணத்தை தள்ளிப்போடும் மார்க்கெட் நடிகை

கைநிறைய படங்கள் இருப்பதால், தன்னுடைய திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளாராம் மார்க்கெட் நடிகை.

 
ஆந்திராவைச் சேர்ந்த மார்க்கெட் நடிகை, தமிழிலும் கொடிகட்டிப் பறந்து வருகிறார். சித்தி பிரச்னையால் சில காலம் படங்கள் இல்லாமல் இருந்தார். அந்த சமயத்தில் உடல் எடையும் எக்கச்சக்கமாக அதிகரித்தது. எனவே, ஒரு பாடலுக்கு ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
 
ஆனால், சுதாரித்துக் கொண்ட மார்க்கெட் நடிகை, உடல் எடையைக் குறைத்து மறுபடியும் ஃபார்முக்கு வந்துவிட்டார். அவர் நடித்த பேய்ப்படம், வருகிற 29ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தன் காதலனுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் நடிகை.
 
தமிழ், தெலுங்கில் நடிகையின் கைவசம் தற்போது 6 படங்களுக்கு மேல் இருக்கின்றன. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த திருமணத்தை, அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டு விட்டாராம். நடிகையும், அவருடைய காதலரான இரண்டெழுத்து நடிகரும் நீண்ட காலமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.