வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (07:20 IST)

மும்பைக் கிரிக்கெட்டரோடு காதலில் பூஜா ஹெக்டே?

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

இப்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகளவில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, மும்பையைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட்டரை காதலிப்பதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. ஆனால் யார் அந்த கிரிக்கெட் வீரர் என்பது பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.