திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 ஜூன் 2021 (14:55 IST)

நயன்தாராவை இரண்டு படங்களுக்கு புக் செய்த தயாரிப்பாளர்…. சம்பளம் இவ்வளவா?

தயாரிப்பாளர் ரமேஷ் பி பிள்ளை நயன்தாராவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

நடிகை நயன்தாரா கதாநாயகி பாதித்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள நடிக்க ஆரம்பித்தது மாயா படத்தின் வெற்றிக்குப் பின்னர்தான். அந்த படத்துக்குப் பின்னர் அறம் உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து அவர் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ரமேஷ் பி பிள்ளை அவரை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து சம்பளமாக 11 கோடி ரூபாய் நயன்தாராவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.