திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 6 மே 2023 (09:20 IST)

முத்தையா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… கோத்து விடும் சன் பிக்சர்ஸ்!

மாவீரன் படத்தை முடித்துள்ள சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்த படத்தை முடித்ததும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்க முத்தையாவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனுகியுள்ளதாக சொல்லப்படுகிறது.