ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:45 IST)

இவங்களுக்கு 54 வயசுன்னா நம்ப முடியுதா… நதியா வெளியிட்ட புகைப்படங்கள்!

பிரபல நடிகை நதியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் இப்போது அமெரிக்காவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் புகைப்படத்தொகுப்பு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அதிலும் அவர் மிகவும் இளமையாக இருப்பதைப் பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் உங்களைப் பார்த்தால் உங்களுக்கு 54 வயது என நம்பவே முடியவில்லை எனக் கூறிவருகின்றனர்.பிரபல நடிகை நதியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.