1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2020 (16:17 IST)

லாக்டவுன் நேரத்தில் சத்தமில்லாமல் நடந்த நடிகையின் நிச்சயதார்த்தம்!

தமிழில் அமரர் காவியம், வெற்றிவேல், நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மோகன்லால் ,மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்கள் படத்தில் நாயகியாக நடித்து புகழ்பெறுள்ளார்.

தற்போது சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து  இயக்கி வரும் "கோப்ரா" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல் மலையாளத்திலும் "கண்மணிலா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துள்ள மியா ஜார்ஜிற்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் திடீரென நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது.


கொரோனா ஊரடங்கில் இருவீட்டாரின் சொந்தங்கள் மட்டும் பங்கேற்ற இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இவர்களது திருமணம் செப்டெம்பர் மாதம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கூறுகிறது.