நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன்!
நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திடீரென மீராமிதுன் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். பின்னர் கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மீராமிதுன் தங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.