வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (19:05 IST)

ஆயிரக்கணக்கில் குவியும் அஞ்சல் அட்டைகள்: ரஜினிகாந்த் அதிர்ச்சி

ஆயிரக்கணக்கில் குவியும் அஞ்சல் அட்டைகள்: ரஜினிகாந்த் அதிர்ச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் தற்போது புது மாதிரியாக ரஜினிகாந்த் வீட்டிற்கு ஆயிரக்கணக்கில் அஞ்சல் அட்டைகளை அவரது ரசிகர்கள் அனுப்பி வருகின்றனர். அந்த அஞ்சல் அட்டையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கும் வாசகங்கள் உள்ளன என்பதும், இந்த அஞ்சல் அட்டைகள் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே மக்கள் புரட்சி எழுந்தால் மட்டுமே அரசியலுக்கு வருவேன் என்று ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் தற்போது ரசிகர்கள் அஞ்சல் அட்டை அனுப்பி புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்ற நிலையை எடுத்து விட்டதாக கூறப்படும் நிலையில் ரசிகர்களின் தொடர் கோரிக்கை காரணமாக மனம் மாறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்