செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (11:11 IST)

ஆயா வயசுல ஆட்டமா கேட்குது? கஸ்தூரியின் மைனரு வேட்டி டான்ஸ் ட்ரோல்!

நடிகை கஸ்தூரி  தன் மனதில் தோன்றும், அரசியல் கருத்துக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிவரும் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில்  90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்தவர். இவர் கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் இருந்த அத்தனை நடிகர்களுடனும் ஜோடிபோட்டு நடித்துவிட்டார் என்றே சொல்லலாம். 
 
பிறகு ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு சன்கல்ப் என்ற ஒரு மகனும் சோபினி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். திருமணமாகி இரன்டு குழந்தைக்கு தாயான பிறகும் கூட கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வருகிறார் அம்மணி. 
 
இந்நிலையில் தற்போது 48 வயதாகும் கஸ்தூரி மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு புடவையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார். இந்த வீடியோ இணையவாசிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.