வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (12:36 IST)

உன் கணவர் என்ன பண்ணுறார் ? ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் டபுள் மீனிங் பதிலை பாருங்க.!

தன் மனதில் தோன்றும், அரசியல் கருத்துக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிவரும் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில்  90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்தவர். இவர் கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் இருந்த அத்தனை நடிகர்களுடனும் ஜோடிபோட்டு நடித்துவிட்டார் என்றே சொல்லலாம். 
 


 
பிறகு ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு சன்கல்ப் என்ற ஒரு மகனும் சோபினி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். திருமணமாகி இரன்டு குழந்தைக்கு தாயான பிறகும் கூட கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வருகிறார் அம்மணி. 

இந்நிலையில் சமீபத்தில் கஸ்தூரி இளையராஜா 75 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பங்கேற்றார். அப்போது எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘சன் டிவியில் வரும் இந்த தொகுப்பாளனி எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று கூறியிருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். 
 
அப்போது ட்விட்டர் வாசி ஒருவர் " வயசானாலும் உன் அழகு மிரட்டுது முடியல, உன் ஹஸ்பண்ட் என்ன பண்றார்’ என்று கமெண்ட் அடிக்க...இதற்கு ரிட்வீட் செய்த கஸ்தூரி "என்ன பண்றார்" என்று ஸ்மைலியுடன் பதிலளித்தார். இந்த பதிலை ஸ்க்ரீன்ஸ் ஷாட் எடுத்து பலரும் கஸ்தூரி இரட்டை அர்த்தத்தில் பேசுவதாக கூறி  வருகின்றனர்.