1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (08:15 IST)

மொதல்ல உன் தந்தை யாருன்னு கண்டுபிடி; ட்விட்டரில் பொங்கியெழுந்த கஸ்தூரி

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தன்னை கீழ்த்தரமாக திட்டிய நபருக்கு பதிலடி தரும் விதமாக,  ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
நடிகை கஸ்தூரி சமீப காலமாக சினிமா, அரசியல் என பல்வேறு சமூக விஷயங்கள் பற்றி ட்விட்டரில் கருத்து கூறி வருகிறார். 
 
இந்நிலையில் கஸ்தூரியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதனை சமூக வலைத்தளத்தில் உலவ விட்டுள்ளனர். கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவேற்றம் செய்த நபர், ட்விட்டரில் நடிகை கஸ்தூரியிடம், ஒரு கீழ்த்தரமான கேள்வியை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி  தன்னை கீழ்த்தரமாக திட்டிய நபருக்கு பதிலடி தரும் விதமாக, ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
இதனைப்பார்த்த நபர் ஒருவர், கஸ்தூரியிடம் உங்கள துணிவான பெண்மணி என மதிக்கும் ஆண்மகன் நான் . இருந்தாலும் இது போன்ற வார்த்தைகள் வேண்டாமே தோழி என்று கேட்டுக்கொண்டார்.
 
இதற்கு பதிலளித்த கஸ்தூரி ஆயிரம் ஏச்சு வருது... இக்னோர் பண்ணுறேன். ஏதாவது ஒன்னு ரெண்டுக்கு என்னையும் அடக்கமாட்டாம  ரியாக்ட் பண்ணிடுறேன். மனசுல பட்டதை  சொல்லியே பழக்கப்பட்டுட்டேன், இனி இன்னும் பொறுமையாக இருக்க முயல்கிறேன் என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.