வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கனும்... எலிஜிபிள் பேச்சுலர்ஸ் ப்ளீஸ் நோட் தி பாயிண்ட்!

Papiksha Joseph| Last Updated: வியாழன், 14 மே 2020 (17:08 IST)

தனது வருங்கால கணவரிடம் நடிகை காஜல் அகர்வால் இதை மட்டும் தான் எதிர்பார்க்கிறாராம்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். தற்போது கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இத்தற்கிடையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காஜல் புகைப்படம் , வீடியோ உள்ளிட்டவற்றால் ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துரையாடிய காஜல் அகர்வாலிடம் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என கேட்டதற்கு பதிலளித்த அவர்" காதலிப்பதற்கு ராஜகுமாரன் தேவையில்லை. எனக்கு ஏற்ற சரியான நபராக இருந்தால் மட்டும் போதும். அதாவது, என் எண்ணங்களையும், லட்சியங்களையும் புரிந்து கொண்டு என்னை எனக்காக காதலிப்பவராக இருக்க வேண்டும் என்று பதிலளித்தார். இதனை கேட்ட அவரது ரசிகர்கள் சூப்பர் பேபி... இந்த கண்டீஷன்ஸ்ல நாங்க பாஸ் பண்ணிடுவோம் உங்களுக்கு ஓகேவா? என இப்போதே அப்ளிகேஷன் போட்டு வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :