1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (17:22 IST)

சீரியலில் இருந்து வாண்டட் ஆக விலகும் நடிகரின் மகள்- பின்னணி இதுதானாம்!

நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிட்டா தான் நடித்து வரும் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் கலக்கியவர் லிவிங்ஸ்டன். இவர் ஒரு இயக்குனர் மற்றும் கதாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரு மகள்கள் உள்ளனர்.  இதில் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

ஆனால் சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலக உள்ளாராம். இதற்காக தனது காட்சிகளை சீக்கிரமாக முடிக்க சொல்லி அவர் கேட்டுக்கொண்டுள்ளதகா சொல்லப்படுகிறது. இதற்கு தயாரிப்பு தரப்போடு அவருக்கு ஏற்பட்ட மோதலே காரணம் என சொல்லப்படுகிறது.

புதுமுக இயக்குனர் அஸ்வின் மாதவன் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் ’கலாசல்’ படத்தில் ஜோவிதா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.