கேங்ஸ்டர் படத்தில் தெய்வத்திருமகள் சாரா அர்ஜுன் ! திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை!
இயக்குனர் விவேக் இயக்கும் கொடேஷன் கேங் படத்தில் பிரியாமணி மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அருண் விஜய் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க பாக்ஸர் படத்தை இயக்க ஒப்பந்தமானார் இயக்குனர் விவேக். ஆனால் அந்த படம் பல காரணங்களால் தாமதமாகவே இப்போது ப்ரியா மணி மற்றும் தெய்வதிருமகள் சாரா அர்ஜுன் நடிக்கும் கொடேஷன் கேங் எனும் கேங்ஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் சாரா அர்ஜுன் கல்லூரி மாணவியாக பழிவாங்கும் எண்ணம் கொண்டவராக நடிக்கிறார் என்றும் இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார் இயக்குனர் விவேக். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடக்க உள்ளதாக தெரிகிறது.