செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (08:49 IST)

ஜூனியர் என் டி ஆரை அடுத்து ராம்சரண் படத்திலும் நடிக்கும் ஜான்வி… ஆரம்பம் அமர்க்களமா இருக்கே!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தென்னிந்திய படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார். ஜான்வி கபூர், நடிகரும் முன்னாள் மராட்டிய முதல்வரின் பேரனுமான ஷிகர் பஹாரியை காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஜூனியர் என் டி ஆர் ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு கொரட்டாலா சிவா நடிக்கும் படத்தில் நடிக்கிறார். அதில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தென்னிந்தியா சினிமாவில் அறிமுகம் ஆகிறார் ஜான்வி. இந்நிலையில் இப்போது RRR படத்தின் மற்றொரு கதாநாயகனான ராம்சரண் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ராம்சரண், அடுத்து புஜ்ஜி பாபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில்தான் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.