1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (20:32 IST)

பிரபல இளம் நடிகை மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி

actress joo eun
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் நடிகை 26 வயதில் அவரது வீட்டில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தென்கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் நடிகை ஜங் சே –யல்(26 வயது). இவர்  கடந்த 2016 ஆம் ஆண்டு டெவில்ஸ் ரன்வே என்ற ரியாலிட்டி தொடர்களில் மாடலாக அறிமுகமானார்.

அதன்பின்னர், மக்களிடையே பிரபலமான அவர், ஜாம்பி டிடெக்டிவ் என்ற நெட்பிளிக்ஸ் வெப்தொடரில் நடித்து அசத்தினார். இதனால், இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதையடுத்து, காமெடி வெப் தொடர்களிலும், 2018 ஆம் ஆண்டு டீப் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்த  நிலையில், தற்போது வெடிங் இம்பாசிபிள் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த  ஜங் சே  தன் வீட்டில் மரணமடைந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  ஜங் சேவின் இறப்பு, ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.