நடிகை இலியானாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது! ரசிகர்கள் வாழ்த்து..!
நடிகை இலியானா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு விஜய் நடித்த நண்பன் என்ற படத்தில் நடித்தவர் தெலுங்கில் பிரபலமானார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். திருமணம் ஆகாத இலியானா கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அவ்வப்போது தான் கர்ப்பமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Edited by Siva