திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (07:37 IST)

சினிமாவில் ஊதிய பாகுபாடு இருக்கிறது… அஜித் பட நடிகை குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி கேங்ஸ் ஆஃப் வாசேபூர் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் இப்போது அவர் சினிமாவில் பாலினம் சார்ந்து ஊதிய பாகுபாடு இருப்பது குறித்து பேசியுள்ளார். அதில் “சினிமாவில் ஊதிய பாகுபாடு இருக்கிறது. என்னுடன் நடிக்கும் சக ஆண் நடிகர் வாங்கும் ஊதியம் எனக்குக் கொடுக்கப்படுவதில்லை. இது அவமரியாதையாக உள்ளது. அவர்களை போலவே நடிக்கும் எங்களுக்கும் சம ஊதியம் கொடுப்பதில் ஏன் பாரபட்சம்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சினிமா பிரபலமாக இருப்பது எப்போதும் ஜாலியான விஷயம் இல்லை என அவர் கூறியுள்ளார். எப்போதும் எங்களைக் கேமரா பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது எனக் கூறியுள்ளார்.