செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:21 IST)

கொஞ்சம் டைம் கொடுங்க நானே சொல்றேன் - பிக்பாஸில் நுழைகிறார் நடிகை காயத்ரி?

தமிழ் சினிமாவில் 18 வயசு அறிமுகமாகி விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. யதார்த்தமான நடிப்பில் கதைக்கு ஏற்றவாறு தனது கதாபாத்திரத்தை நடிப்பில் அவ்வளவு அழகாக வெளிப்படுத்துவார்.

தொடர்ந்து 'சித்திரம் பேசுதடி 2 ' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து வருகிறார். அதையடுத்து உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே காயத்ரிக்கு சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக எதுவும் படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் அத்தனையிலும் எதாவது ஒரு ரோல் ஆவது நடித்துவிடுகிறார். அதுதான் கோலிவுட்டில் பெரும் குழப்பத்தையும் கிசு கிசுப்பையும் ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில் சமீப நாட்களாக சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காயத்ரி அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இதனால் அம்மணி பிக்பாஸில் கலந்துக்கொள்ளப்போவதாக பேச்சு அடிபட்டது. இதுகுறித்து தனது இன்ஸ்டாவில்,  " எல்லாரும் என்னிடம் இதையே கேக்குறாங்க... கூடிய விரைவில் குறித்த அப்டேட்டை வெளியிடுகிறேன் என பதிவிட்டுள்ளார். ஆக அம்மணி பிக்பாஸில் நுழைய ஆர்வமாகத்தான் இருக்கிறார். ஏதாச்சும் பார்த்து செய்யுங்க விஜய் டிவி.