1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 மே 2021 (17:18 IST)

கதைக்கு ஏற்ற நாயகி நான்... ஹீரோயினாக அறிமுகமாகும் கேபிரில்லா!

டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரில்லா இப்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகவிருக்கிறார். 
 
டிக்டாக்கில் சமூகத்தில் நடக்கும் பல அவலங்களை டிக் டாக்கில் நடித்து காட்டி எமோஷன்களை வெளிக்காட்டி பிரபலமாகியவர் கேபிரில்லா. இயல்பான நடிப்பாலும் சாதாரணமான தோற்றத்தினாலும் ரசிகர்களை கவர்ந்த இவர் நயன்தாராவின் ஐரா படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார். 
 
அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றார். அதையடுத்து தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். N4 எனும் இந்த படத்தை லோகேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கேபிரில்லாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.