1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (16:02 IST)

தனது குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை பானு

விஷால் நடித்த தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பானு. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் முக்தா என்ற பெயரில் அழைக்கப்பட்ட அவர், பிரபலமான பாடகியான ரிமி டாமியின் சகோதரரான ரிங்டு டாமியை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் திரையுலகை விட்டு விலகிய அவர் கேரளாவில் உள்ள கோட்டயம் பகுதியில் வசித்து வருகிறார்.


 

இந்நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.