1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (16:56 IST)

நடிகை ஆர்யா பானர்ஜி கொலையா? தற்கொலையா? பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த தகவல்

நடிகை ஆர்யா பானர்ஜி கொலையா? தற்கொலையா?
பிரபல நடிகை ஆர்யா பானர்ஜி நேற்று திடீரென மர்மமான முறையில் அவரது வீட்டில் மரணம் அடைந்திருந்தார். அவரது வீடு உள்பக்கமாக மூன்று நாட்களாக பூட்டபட்டு இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது ஆர்யா பானர்ஜி பிணமாக இருந்தார் 
 
இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சற்றுமுன் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் ஆர்யா பானர்ஜி கொலை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது வயிற்றில் ஆல்கஹால் அதிகம் இருப்பதாகவும் ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொண்டதால்தான் மரணம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனை அடுத்து ஆர்யா பானர்ஜியின் மர்ம மரணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.