புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 மே 2020 (17:17 IST)

எனக்கு ஏன் ஆபாசப்படம் அனுப்புகிறீர்கள்… வெறுப்பைத் தவிர வேறொன்றும் இல்லை – நடிகை புலம்பல்!

பிரபல மலையாள நடிகையான அனுமோல் தனக்கு ஆபாசப்படத்தை சமூக வலைதளங்கள் மூலமாக அனுப்புவர்களைப் பற்றி கோபமாக பேசியுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளவர் கேரளவைச் சேர்ந்த அனுமோல். இவர் சமூகவலைதளங்களில் ஆர்வமாக இயங்குபவர். இந்நிலையில் இப்போது சிலர் தனக்கு ஆபாசப் படங்களை அனுப்புவதுக் குறித்து புலம்பித்தள்ளியுள்ளார்.

அதில் ‘அந்தரங்க புகைப்படங்களை எனக்கு அனுப்புபவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அப்படி அனுப்புவர்களை பிளாக் செய்து டயர்ட் ஆகிவிட்டேன். ஏதோ கடவுளின் பரிசு போல தன்னுடைய ஆபாச வீடியோக்களை தொடர்ந்து ஒருவர் எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.அயோக்கியர்களே இது அருவருப்பை மட்டுமே தரும். அடுத்த முறை நான் சைபர் கிரைம் போலிஸிடம்தான் புகார் கொடுப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார். இதுபோல முன்னரும் பல நடிகைகள் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.