செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (18:40 IST)

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச் நேரடியாக பார்த்த ரஜினி-விஜய் நடிகை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 12ஆம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முடிவடைந்தது என்பதும் இந்த போட்டியில் இந்தியா அபாரமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த கிரிக்கெட் போட்டிஉஅஒ பிரபல நடிகை ஒருவர் நேரடியாக பார்த்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த ’2.0’, விஜய் நடித்த தெறி தனுஷ் நடித்த ’தங்கமகன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை எமிஜாக்சன் 
 
இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாள் ஆட்டத்தை நடிகை எமி ஜாக்சன் நேரடியாக பார்த்துள்ளார். இந்த தகவல் கோலிவுட் திரையுலகில் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது