வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2023 (11:46 IST)

50 வயதிலும் இளமையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் - அதுக்கு காரணம் இது தான் Beauty Tips!

1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். அதற்கு முன்னர் நடிகர் சல்மான் கானை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார். 
 
தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் 50 வயதாகியும் அதே இளமையோடுஇருக்கும் ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த வெந்நீர் குடிப்பதை தனது நீண்ட வருட பழக்கமாக வைத்துள்ளாராம்.
 
கடலைமாவு, பால், தேன் சேர்த்து முகத்தில் போட்டு 10 நிமிடம் கழித்து வாஷ் செய்வாராம், இதனை மாதம் ஒருமுறை போடுவாராம். மேலும் முகம் பளபளக்க தயிருடன் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து முகத்தை ஸ்க்ரப் செய்வாராம். சந்தன எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்வாராம். மேலும், சம்மரில் தினமும் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி கொள்வாராம். இதெல்லாம் தான் அவரின் அழகின் ரகசிய டிப்ஸ்.