வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2017 (15:17 IST)

மம்முட்டி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஜிமிக்கி கம்மல் நாயகி - கண்ணீர் வீடியோ

கேரள நடிகர் மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆன்னா ராஜன்.


 

 
இந்த படத்தில்தான் சமீபத்தில் பிரபலமடைந்த ஜிமிக்கி கம்மல் பாடல் இடம் பெற்றது. இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, நீங்கள் மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோருடன் நடிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு பதிலளித்த அவர் “மம்முட்டி ஹீரோ எனில் துல்கர் அப்பாவாக நடிக்கட்டும். துல்கர் ஹீரோ எனில் மம்முட்டி அப்பாவாக நடிக்கட்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், துல்கருக்கு வேண்டுமானால் ஜோடியாக நடிக்கிறேன். மம்முட்டி அப்பாவாக நடிக்கட்டும் என கூறியதாக செய்திகள் வெளியானது.
 
எனவே, கோபமடைந்த மம்முட்டியின் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வைத்து செய்து வருகின்றனர். பலர் அவரை பாட்டிமா பாட்டிமா என அழைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். மேலும், பலர் அவரை அசிங்கமாக திட்டியும் கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில், தன்னுடைய முகநூல் பக்கத்தில் மம்முட்டி ரசிகர்களிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டு அவர் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார்.