புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (15:43 IST)

சிறுவனை குதறியெடுத்த வெறி நாய்கள் - வீடியோ எடுத்த பொதுமக்கள்

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை வெறிநாய்கள் கடித்துக் குதறிய போது, அந்த சிறுவனை காப்பாற்றாமல் அங்கிருந்த பொதுமக்கள் வீடிய எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கூலித் தொழில் செய்யும் தம்பதியின் 4 வயது மகன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். 
 
அப்போது தெருவில் சுற்றித் திரிந்த சில வெறி நாய்கள் சிறுவனின் மீது பாய்ந்து குதறின. அதைப் பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டாமல், தனது செல்போன்களால் வீடியோ எடுத்துள்ளனர்.  அதன் பின் சிறுவனின் பெற்றோர் ஓடி வந்து, நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். 
 
ஆனால், சிறுவனின் உடலில் பல இடங்களில் வெறி நாய்கள் கடித்ததால், அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
 
அந்த தெருவில் வெறி நாய்கள் சுற்றி வருவதாக ஒரு வாரத்திற்கு முன்பே நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுவனின் பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.