திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (14:41 IST)

குடும்பத்துடன் ஜாலியா பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு - வைரல் வீடியோ

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் குல தெய்வ கோவிலில் வைத்து சிம்பிளாக திருமணம் செய்துகொண்டார். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை தடபுடலாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கினாள் அது நடைபெறாமல் போயிற்று.

இந்நிலையில் லாக்டவுனை மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் கழித்து வரும் நடிகர் யோகி பாபு இன்று தனது 35 வது பிறந்தநாளை வீட்டில் கேக் வெட்டி ஜாலியாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. யோகி பாபுவின் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இப்படியே நீடிக்கவேண்டும் என கூறி ரசிகர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.