திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:53 IST)

வாக்களிப்பது சம்மந்தமாக நடிகர் விவேக் வீடியோ வெளியீடு!

நகைச்சுவை நடிகரான விவேக் வாக்காளர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி பூத் அமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வாக்காளர்களுக்காக நடிகர் விவேக் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘வாக்கு என்பது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நமக்கு கிடைக்கக்கூடிய ஜனநாயக உரிமை. அதை நாம் விட்டுத்தர கூடாது. ஒரு வாக்கால் என்ன நேர்ந்துவிட போகிறது என நினைப்பது ஜனநாயகத்துக்கு செய்யும் தீங்கு. ஆளுமையை தேர்ந்தெடுப்பது நமது விரல்மை. அதை நாம் மறந்துவிடக்கூடாது. அதனால் அனைவரும் வாக்களியுங்கள்’ எனக் கூறியுள்ளார்.