திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (07:39 IST)

உங்களுக்கு பெரிய சல்யூட்... ஹன்சிகாவை பாராட்டி தள்ளிய விவேக்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.

பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியட் படம் சூப்பர் ஹிட் அடித்து பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது.

ஹீரோயினுக்கு தேவையான தகுதிகளில் இருந்து சற்று விலகி  உடல் எடை அதிகமாக இருந்தாலும் அழகும், திறமையான நடிப்பையும் வெளிப்படுத்தி டாப் ஹீரோயின்ஸ் லிஸ்டில் இடம் பிடித்தார். இந்நிலையில் தற்ப்போது காமெடி நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹன்சிகாவை குறித்து பாராட்டியுள்ளார்.  

அந்த பதிவில், "சிங்கம் 2 படத்தில் அனைவருக்கும் ஹன்சிகாவின் நடிப்பு பிடித்திருக்கும். சினிமா துறையில் இருக்கும் மிக அழகான நடிகைகளில் ஒருவர். வெளித்தோற்றம் அழகாக இருப்பதால் மட்டும் ரசிகர்களை ஈர்க்க முடியாது, நல்ல இதயம் வேண்டும்.ஆம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி, மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார். அவரது இந்த இரக்க குணத்திற்கு பெரிய சல்யூட்" என பதிவிட்டு ஹன்சிகாவை பாராட்டி தள்ளியுள்ளார்.