திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (07:15 IST)

நடிகர் விஷ்வேஸ்வர ராவ் மரணம்… ரசிகர்கள் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து நடிகர்கள் மரணமடைந்து வருகின்றனர். சமீபத்தில் லொள்ளு சபா ஷேஷு மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான விஷ்வேஸ்வர ராவ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் பாலாவின் பிதாமகன் மற்றும் மாதவனின் எவனோ ஒருவன் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் சினிமா, சீரியல் என நடித்துள்ள அவருக்கு வயது 61. அவரின் மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் சமூகவலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.